இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது பேசுபொருளானது. தையடுத்து திரைத்துறை பிரபலங்கள் பலர் `இந்தி’ பற்றிப் பேசினர். இது குறித்தான ஒரு ரீவைண்ட்
‘தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று கூறிய இசையைப்பாளர் ரகுமான், “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற அவரின் ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்தது.
`ஒரே மொழி ஒரே தேசம் ஒரே மதம்’ என்ற அவர்களின் அஜெண்டா தான் இங்கு பிரச்னை. ‘நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், என்ன பேச வேண்டும், எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? – பிரகாஷ் ராஜ்
“இந்தி இதற்கு முன்பும்… இப்போதும்… இனிமேலும் நமது தாய்மொழியாக, தேசியமொழியாக இருக்கும்” – பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்
“இந்தி ஒருபோதும் தேசியமொழி கிடையாது” -கன்னட நடிகர் சுதீப்
“இந்தி தேசிய மொழி என்பதை இந்திய அரசியல் சட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எனவே அஜய் தேவ்கன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் மத்திய அரசை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்” -கங்கனா ரணாவத்
“இந்தி எங்கள் தேசிய மொழி அல்ல. அஜய் தேவ்கனின் அறியாமை திகைக்க வைக்கிறது” -திவ்யா ஸ்பந்தனா
“இந்தியா என்பது சிறந்த மொழிகளின் கலவையாகும். அவற்றை அப்படியே விடுங்கள்” – நடிகர் சித்தார்த்.
“இந்தி நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டுமென்றால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று தமிழர்களும் நல்லவர்கள்தான்.” -சுஹாசினி மணிரத்னம்.
“இந்தி மொழி பற்றி திரைக் கலைஞர்கள் பேசுவது அவர்களின் சுய இலாபத்திற்காக. மக்களின் அன்பை கொஞ்ச கொஞ்சமாக சேகரித்து ஒரு இடத்திற்கு வந்துவிட்ட பிறகு தங்களை ஒரு கம்பெனிக்கோ, கட்சிக்கோ கொண்டு போய் வித்துடுவாங்க. இந்தி தான் தேசிய மொழி என சொல்வது பாசிசத்தின் தொடக்கம்.” -இயக்குநர் அமீர்.