இந்த ஆட்டோமொபைல் பங்கினை வாங்கிபோடுங்க.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

பங்கு சந்தை முதலீடுகள் குறித்து சமீப காலமாக ஆர்வம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளைய தலைமுறை மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

எனினும் சரியான பங்குகளை தேர்வு செய்வதே மிக கடினமான ஒரு ஆப்சனாக உள்ளது.

அந்த வகையில் தரகு நிறுவனங்கள் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளன. ஏன் அந்த பங்குகளை வாங்க கூறுகின்றன. கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? இலக்கு விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் காலாண்டு முடிவு எப்படியிருக்கும்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்கு விலை 1% மேலாக சரிவு!

என்ன பங்கு

என்ன பங்கு

நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு டிவிஎஸ் மோட்டார்ஸ்.

இது இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனம் 30,000 கோடி ரூபாயாகும். இந்தியா தவிர இந்த நிறுவனம், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா, லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட பிற சர்வதேச சந்தைகளிலும் உள்ளது.

இலக்கு விலை

இலக்கு விலை

மே- 6 அன்று இப்பங்கின் விலையானது 629.05 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம். இதன் இலக்கு விலை 768 ரூபாய் என்றும் ஆனந்த ரதி ஃபைனான்ஷியல் நிறுவனம் கணித்துள்ளது.

எதிர்பார்ப்பு
 

எதிர்பார்ப்பு

தொடர்ந்து மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில், வாகன விலையும் உயர்த்தப்பட்டது. இது மார்ஜின் விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இனி வரவிருக்கும் காலாண்டுகளிலும் செலவுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில், வலுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2023 நிதியாண்டிலும் மற்றும் 2024ம் நிதியாண்டிலும், முறையே 10 சதவீதம் மார்ஜின் வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப் பற்றாக்குறை

சிப் பற்றாக்குறை

கடந்த மார்ச் காலாண்டில் வளர்ச்சி விகிதம் சிப் பற்றாக்குறை காரணமாக , உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 4% வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் கடந்த காலாண்டினை காட்டிலும் 3% சரிவினைக் கண்டுள்ளது. அதேசமயம் மின்சார வாகனங்களுக்கான ஆர்டரும் வலுவாக இருந்து வரும் நிலையில், அதுவும் நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

மொத்தத்தில் தரகு நிறுவனம் இந்த நிறுவனத்தின் CAGR விகிதம் fy22 – 24 காலகட்டத்தில் 20% வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்பங்கினை வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 768 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Buy this automobile stock for a target price of Rs.768: analysts says

Buy this automobile stock for a target price of Rs.768: analysts says/இந்த ஆட்டோமொபைல் பங்கினை வாங்கிபோடுங்க.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

Story first published: Sunday, May 8, 2022, 21:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.