கீவ்: உக்ரைனில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லட்சகணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பிலோகொரிவிகா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 90 பேர் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கு ரஷ்ய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதாக, லூகான்ஸ்க் பிராந்திய கவர்னர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில், பள்ளி முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் இருந்து 27 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதில், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கீவ்: உக்ரைனில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.