உணவு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் உள்ள இறைச்சி மற்றும் ஷவர்மா உணவு கடைகளிலும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.ஷவர்மா உணவு முறையாக தயாரிக்கபடுகிறதா. இறைச்சி முழுமையாக வேக வைக்கபட்டுள்ளதா. இறைச்சி அறுத்து எத்தனை மணி நேரம் ஆகிறது என, ஆய்வு செய்தார்.

முதல் நாள் மிச்சம் ஆன உணவை மறுநாள் பயன்படுத்த கூடாது. உணவு தயாரிக்கும் இடத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர். கட்டுபாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.கடைகளில் இருந்த 2 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.