நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் ஒரு பகுதியான புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது.
உதகை சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அரங்கில், வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சயில் புலிகள், சிறுத்தை புலி, கடமான் உள்ளிட வனவிலங்குகள், பறவைகள், இயற்கை சூழல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 31-ந் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் தொடக்கி வைத்தனர்