கர்நாடகாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. எதற்காக?

டொயோட்டா குழுமம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய 4,800 கோடி ரூபாயினை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடானது எந்த மாநிலத்தில் செய்யப்படவுள்ளது? கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டொயோட்டா குழுமத்தினை சேர்ந்த டொயோட்டா கிர்லேஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அதன் உற்பத்தியினை மேம்படுத்தவும், உதிரி பாகங்கள் உற்பத்தியினை மேம்படுத்தவும் 4800 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளது.

மாருதி – டொயோட்டா கூட்டணியில் புதிய கார்.. பெரிய மீனை பிடிக்க சின்ன மீன்..!

டோயோட்டா முதலீடு

டோயோட்டா முதலீடு

இது குறித்து டொயோட்டா குழுமத்தினை சேர்ந்த இரு நிறுவனங்களும் கர்நாடகா அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் 4100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினையும், இதே டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் இஞ்சின் இந்தியா நிறுவனமும் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது.

பசுமை தொழில் நுட்பம்

பசுமை தொழில் நுட்பம்

இந்த முதலீடானது பசுமை தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் செய்யப்படவுள்ளது. இது எரிபொருள் தேவையினை குறைக்கும். இது கார்பன் உமிழ்வை குறைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மாநிலத்தின் உற்பத்தியினை மேம்பத்த உதவும். இது வேலை வாய்ப்பினையும் மேம்படுத்தும்.

மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும்
 

மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும்

இந்த முதலீட்டின் மூலம் மின்சார வாகன உற்பத்தியினை மேம்படுத்துவதோடு, உதிரி பாகங்கள் உற்பத்தியினையும் செய்யவுள்ளது. இது உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்க வழிவகுக்கும். இது இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியினை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய மைல்கல்

முக்கிய மைல்கல்

இந்த முதலீடானது மின்சார வாகன உற்பத்தியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கார்பன் உமிழ்வானது கட்டுப்படுத்தப்படும். வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும். உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்தும்.

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடகா சர்வதேச அளவிலான சப்ளை சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மாநிலமாக மாற வேண்டும். ஒரு பெரும் உற்பத்தி நகரமாக மாற வேண்டும். அதற்கு டொயோட்டா குழுமத்துடனான ஒப்பந்தமும் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Toyota plans to invest Rs.4800 crore to locally produce EV components in Karnataka

Toyota plans to invest Rs.4800 crore to locally produce EV components in Karnataka/கர்நாடகாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. எதற்காக?

Story first published: Sunday, May 8, 2022, 14:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.