சீதா ராமம்: துல்கர் சல்மான் இந்து! ராஷ்மிகா இஸ்லாமியர்!

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தயாரிக்க, ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், “ சீதா ராமம்”.

இப்படத்தில் துல்கர் சல்மான், ராம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; ராஷ்மிகா மந்தனா காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற பெண்ணாக நடிக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் படம் வெளியாகும்” என படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.