திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை 5 நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச்செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில்:-
திருமலையில் அனுமன் பிறந்த இடத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது.
முதல் 4 நாட்கள் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
29ந்தேதி அகண்ட சம்பூரண சுந்தரகாண்ட பாராயணம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தர்மகிரி வேதபாட மாணவர்களும், சாலை தேவஸ்தான அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அனுமன் ஜெயந்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது.