ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடினார். ராமரின் பெயரைப் பயன்படுத்தியதற்காக, திகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்னை சிறையில் அடைத்து துன்புறுத்தி, சித்தரவதை செய்தார் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, முதல்வருக்கு சவால் விட்ட அவர், உங்களுக்கு தைரியம் இருந்தால், மாநிலத்தில் எந்த மாவட்டத்திலாவது போட்டியிடுங்கள். உங்களை எதிர்த்து நான் போட்டியிடுகிறன். அப்போது மக்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.
அனுமன் பஜனை பாடுவது குற்றம் என்றால், 14 நாட்கள் மட்டுமல்ல, 14 ஆண்டுகள் கூட சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன். ஒரு பெண்ணின் குரலை 14 நாட்கள் சிறையில் வைத்து அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கடவுளின் பெயரில் நமது சண்டை நடக்கிறது. அது அது தொடரும் என்றார்.
அமராவதி எம்.பி., நவ்நீத் ராணா ஸ்பாண்டிலோசிஸ் சிகிச்சைக்காக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எம்.பி ராணாவும் அவரது கணவர் எம்.எல்.ஏ ரவியும் ஏப்ரல் 23 அன்று முதல்வரின் தனிப்பட்ட இல்லமான மாடோஸ்ரீ முன்பு, அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த சிறப்ப நீதிமன்றம், தாக்கரேவுக்கு எதிரான அறிக்கையில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் எல்லைகளைத் தாண்டியுள்ளனர். ஆனால், ஐபிசி 124 A பிரிவின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு இது போதுமான காரணமாக கருதப்படுவில்லை என கூறி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும் பேசிய ராணா, முன்னோர்களின் பெயரால் உங்களுக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவும் நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், ராமர் பெயரைச் சொன்தற்காக என்னை சித்தரவதை செய்தற்காகவும் மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள் என்றார்.
சிவசேனா ஆளும் பிரஹன்மும்பை மாநகராட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழலை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என ராணா கூறியுள்ளார்.