நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்



ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசரகால உத்தரவு 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

அவசரகால உத்தரவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து 10 நாட்களுக்குள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளமையினால் இரண்டு வாரங்களில் தானாகவே இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 6ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். எவ்வாறாயினும் சபாநாயகரின் கூற்றுப்படி எதிர்வரும் 17ஆம் திகதியே மீண்டும் நாடாளுமன்றம் கூடும்.

இந்த அவசர கால சட்ட அறிக்கையில் அவசரகால உத்தரவுகள் எதுவும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசரகாலச் சட்டம் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதால் அமைதியான முறையில் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை அவசர சட்டத்தின் கீழ் தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், அது ஒருபோதும் அரசியலமைப்பை மீறி செல்லாது. ஆனால் இது வேறு எந்த சட்டத்தையும் தாண்டி செல்லலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை விட நடத்தை விதிகள் அதிகம்.

ஆனால் அது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு அப்பால் செல்லவில்லை.

ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மக்கள் நடமாடும் சுதந்திரம் ஆகியவை இழக்கப்படாது.

அமைதியான போராட்டங்கள் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் போராட்டங்களாக நடத்துவதை இது பாதிக்காது.

ஆனால் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்திய 10 நாட்களுக்குள் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே அதனை ஒரு மாதத்திற்கு செல்லுபடியாக்க முடியும்.

அவசரகால சட்டம் மே மாதம் 06ஆம் திகதி அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது மே 16ஆம் திகதியுடன் 10 நாட்கள் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் இந்த உத்தரவு செல்லுபடியற்றதாகும்.

அதாவது மே 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் இந்த அவசர உத்தரவு தானாகவே இரத்தாகிவிடும். ஒரு மாதம் அமுல்படுத்த முடியாது. எப்படியிருப்பினும் இது வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.