பழைய சோற்றின் மகத்துவம் அறிவோம்! | Visual Story

பழைய சோறு

ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியில் பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு பழைய சோறு தீர்வாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பழைய சோறு

முந்தைய நாள் இரவு ஊற வைத்த பழைய சோற்றை தினசரி தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதில்லை ஆய்வு முடிவு கூறுகிறது.

Tablets (Representational Image)

பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழங்கப்படும் ஆன்டி பயாட்டிக் மாத்திரை – மருந்துகள் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால் குடல் பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது.

பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பழைய சோறு

சோற்றை தண்ணீரில் ஊற வைக்கும்போது அது நொதிக்கையில் காற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அவை உள் இழுத்துக்கொள்கின்றன.

அரிசி

அரிசியின் மேற்பரப்பில்தான் நார்ச்சத்து நிறைந்திருக்கும். கைக்குத்தல் அரிசியில் மேற்பரப்பு நீக்கப்படாததால் அவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.

இயற்கையாக விளைந்த அரிசியில் சோறாக்கி உண்பதன் மூலமும் அதை ஊற வைத்து பழைய சோறாக சாப்பிடுவதன் மூலமும் இரைப்பை மற்றும் குடலுக்கு இது பல நன்மைகள் கிடைக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.