பாரதியார் கிராம வங்கி தலைமை அலுவலகம் இடமாற்றம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியின் தலைமை அலுவலகம் சாரம் காமராஜ் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுபுதுச்சேரி, முத்தியால்பேட்டையில் இயங்கி வந்த, பாரதியார் கிராம வங்கியின் தலைமை அலுவலகம், நிர்வாக வசதிக்காக சாரம், காமராஜ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வங்கியின் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.இந்தியன் வங்கி செயல் இயக்குனர் இம்ரான் அமின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்தியன் வங்கி பொதுமேலாளர் சூரிபாபு, தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் செல்வராஜ், சப்தகிரி கிராம வங்கி தலைவர் பிரசாத், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வங்கி பொதுமேலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.