முதல்வர் அலுவலகம் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது ; முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு| Dinamalar

புதுச்சேரி : முதல்வர் அலுவலகம் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பல மாநிலங்களில் மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தனர்.

ஆனால் மத்திய அரசு நாடு முழுதும் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக கணக்கு தெரிவித்துள்ளது.ஆனால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் 40 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.போலி கணக்குஉண்மையில் நாடு முழுதும் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை அனைத்துக்கட்சி குழு அமைத்து கண்டறிய வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி அளிக்க சுப்ரீம் கோர்ட் கூறியதால் மத்திய அரசு போலியான கணக்கை காட்டியுள்ளது.மக்கள் அதிருப்திமத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரி வருகையால் பல மாற்றங்கள் ஏற்படும் என ஆளும் கட்சியினர் கூறினர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியுள்ளது. காங்.,- தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை அடிக்கல் நாட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். உள்துறை அமைச்சர் வருகையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றனர். ஆனால், காட்சி மாற்றம் கூட நடைபெறவில்லை.வெடிகுண்டு கலாசாரம்புதுச்சேரியில் வெடி குண்டு கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. இதைப்பற்றி போலீஸ் அதிகாரிகளும் கவலைப்படவில்லை. ஆட்சியாளர்களும் கண்டுக்கொள்ளவில்லை. காங்., ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம்.வெடி குண்டு கலாசாரத்தை ஒழித்தோம். கள்ள லாட்டரி, கஞ்சாவை ஒழித்தோம். ஆனால் இப்போது அழகுநிலையங்களில் விபசாரம் நடக்கின்றது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நோக்கி கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கின்றது. இதை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. இதனை தடுக்க ஆட்சியாளர்களுக்கு தெம்பு, திராணி இல்லை.புரோக்கர்களின் கூடாரம்முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது. முதல்வரை பார்க்க வருபவர், அங்குள்ள புரோக்கர்களுக்கு மாமூல் கொடுத்துவிட்டுதான் பார்க்க முடியும். அமைச்சர்களுக்கும் புரோக்கர்கள் உள்ளனர். இது புரோக்கர்கள் மலிந்த அரசாக உள்ளது. இதனால் இந்த ஆட்சியில் மக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சூழல் இல்லை.ஊழலின் கூடாரம்கலால் துறை ஊழலின் ஒட்டுமொத்த கூடரமாக உள்ளது. அயல்நாட்டு மது விற்பனையை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், ரூ.10 லட்சம் இல்லாமல் நடக்காது. இதில் பலருக்கும் பங்கு உள்ளது.

அந்த துறையின் அமைச்சர் முதல்வர் ரங்கசாமி தான். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை.தவறான முடிவுமுதல்வர் ரங்கசாமி அரசு எடுத்த தவறான முடிவுகளால்தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போயுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தியது தான் மோடி அரசின் சாதனை.விமர்சிக்க தகுதியில்லைதோல்வி பயத்தால் தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்., தனித்து நின்றபோது கூட நான் போட்டியிட்டேன்.
தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல நான்.அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே வெற்றி பெற்ற வில்லியனுார் தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிட காரணம் என்ன? தோல்வி பயமா? அல்லது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா?அவர் இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார். எங்கு வாய்ப்பு இருக்கின்றதோ அங்கு நிற்பார். கட்சி மாறு பவர்களுக்கு காங்., கட்சியையும், என்னையும் விமர்சிக்கும் தகுதியில்லை.பா.ஜ.,விற்கு சென் றுள்ள அவர் அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரிய வில்லை. கட்சி மாறி வந்தாலும் அவருக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து காங். அழகு பார்த்தது. ஆனால் அவர் காங்., கட்சிக்கு துரோகம் செய்தார்.இவ்வாறு முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.