வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: முன்னறிவிப்பின்றி உக்ரைன் பயணம் மேற்கொண்ட அமெரி்க்க அதிபரின் மனைவி ஜில் ஜோபைடன் அங்கு உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்.,24 ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் நாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தந்து வருவதுடன் தேவையான ஆயுத உதவியும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் ஜோபைடன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவர் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்காலிகமாக தங்குமிடமாக செயல்படும் ஒரு பள்ளிக்கு சென்று அதிபரின் மனைவியை சந்தித்தேன். இந்த போர் மிருகத்தனமானது. போர் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்கின்றனர். என கூறினார்.
இருநாடுகளிடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா.,சபையின் பொது செயலாளர் மட்டுமே உக்ரைன் சென்றுள்ளார். மற்ற பிற நாட்டு தலைவர்கள் மற்றும் நோட்டோ தலைவர்கள் யாரும் செல்லாத நிலையில் முன்னறிவிப்பின்றி அதிபர்களின் மனைவிகள் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement