வெளிநடப்பு தேவையில்லாதது… அங்கேயே இருந்து இதைப்பற்றி பேசவேண்டும்.! #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 6-ஆம் தேதிக்கான தலைப்பாக “சட்டம் ஒழுங்கு பாதிப்பு குற்றச்சாட்டு… வெளிநடப்பு செய்த அதிமுக… நியாயமான குற்றச்சாட்டா? இல்லை அரசியலா?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

Kaviyanandh K
அதிமுக நியாயமாக தான் நடந்துள்ளது. நடக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஆளுங்கட்சி கவனத்திற்கு கொண்டு செல்வது எதிா்க்கட்சியின் கடமை. அதை அதிமுக சிறப்பாக செய்கிறது. திமுக ஆட்சியில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாகவே உள்ளது. 2006-11 திரும்புகிறேதா என்ற அச்சநிலை நிலவுகிறது.

Imayavaramban
சட்டம் ஒழுங்கு பற்றி பற்றி பேச அவர்களுக்கு அருகதையே இல்லை? தூத்துக்குடி, சாத்தான்குளம்,பொள்ளாச்சி சம்பவம், இதில் அப்போதைய முதல்வரின் அறிக்கை, பேச்சு இவைகளே சான்று.

image
Advice Avvaiyar
ஒருவர் ஆட்சியில் நடக்கும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டினை, மற்றவர் குறை, குற்றஞ் சொல்லிக்  கொண்டே, வெளி நடப்பு செய்வது எப்பவும் நடப்பது தான். அனைத்தையும் குறை சொல்வது தான் எதிர்க்கட்சிகளின் பிரதான வேலை. இதனால் என்ன பயன்? இரு கட்சிகளின் ஆட்சியிலும் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுதான் இருக்கு. என்ன செய்ய முடிந்தது, இல்லை முடிகிறது? நடக்கக் கூடாதது  நடந்து கொண்டே இருக்க, குற்றஞ்சொல்லிக்கிட்டே இவர்கள், மக்களின் நிலைதான் டேஞ்சராகிட்டே இருக்கு. தீர்வை யோசிக்காமல், காலங்கடந்து கொண்டே, இருக்க, இதை எப்படித் தடுப்பது என சிந்தித்து செயலில் வேகம் காட்டுங்கள்.அது தான் உடனடித் தேவை.

வேட்டையன்
இதற்கு வெளிநடப்பு தேவையில்லாதது அங்கேயே இருந்து இதைப்பற்றி பேசவேண்டும்.

Karthi S Bsc
கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் அவர்கள் தங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அப்போது பொள்ளாச்சி சம்பவம் மற்றும் பல சம்பவங்கள் எல்லாம் சட்டம் ஒழுங்கு அப்போது சரியாக இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது இருக்கின்ற அரசு நியாயமான சட்ட ஒழுங்கு நடவேடிக்கை எடுத்து வருவதால் இவர்களது அரசியலாக நினைக்க பார்க்கிறார்கள். ஆகவே இது சட்ட ஒழுங்கு பிரச்சனை அல்ல அரசியல் தான் என்று நான் கருதுகிறேன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.