ஹைதராபாத் அணியை தவிடுபொடியாக்கிய இலங்கை வீரர்!


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத்தொடர்ந்து, 193 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகள் எடுத்து சன்ரைசர்ஸ் அணியை சிதறடித்தார்.

இந்த சீசனில் ஏற்கெனவே 2 பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த உம்றான் மாலிக் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.