இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. சினிமாவுக்காக ஒரு பெயர் வைக்க நினைக்கிறார் அப்பா கஸ்தூரி ராஜா. அப்போது பார்த்துக்கொண்டிருந்த ‘குருதிப்புனல்’ படத்தின் ‘ஆபரேஷன் தனுஷ்’ மனதில் பதிய, அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் தனுஷ்.
சைவப் பிரியர். அவ்வப்போது முட்டை மட்டும் சேர்த்துக்கொள்வார். தனது ஒல்லியான உடம்புக்கு சைவ உணவுப்பழக்கம்தான் காரணம் என்பார்.
ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், முழுக்க முழுக்க அந்தப் படத்தின் சிந்தனையிலேயே இருப்பார். அந்தக் கதாபாத்திரமாகவே தன்னைச் செதுக்கிக்கொள்வதால், டப்பிங்கின்போது செம ஸ்பீடு. சில படங்களின் டப்பிங்கெல்லாம் ஒரே நாளில் முடித்திருக்கிறார்.
யூட்யூபில் 10 கோடி ஹிட்ஸை முதலில் தொட்ட முதல் தமிழ்ப்பாடல் ‘வொய் திஸ் கொலவெறி’யை எழுத தனுஷ் எடுத்துக்கொண்டது, வெறும் ஆறே நிமிடங்கள். இந்திய அளவில் மக்களிடையே யூட்யூபுக்கே பெரும் வெளிச்சம் கொடுத்தது அந்தப் பாடல்.
யூட்யூபில் 10 கோடி ஹிட்ஸை முதலில் தொட்ட முதல் தமிழ்ப்பாடல் ‘வொய் திஸ் கொலவெறி’யை எழுத தனுஷ் எடுத்துக்கொண்டது, வெறும் ஆறே நிமிடங்கள். இந்திய அளவில் மக்களிடையே யூட்யூபுக்கே பெரும் வெளிச்சம் கொடுத்தது அந்தப் பாடல்.
‘என் வாழ்க்கையில் தியரியே இல்லை. எல்லாமே நானாகக் கற்றுக்கொண்ட ப்ராக்டிகல்தான்’ என்பது தனுஷின் வாழ்க்கைத் தத்துவம்.
அண்ணன் செல்வராகவன்தான், தன்னைச் செதுக்கிய குரு என்று உறுதியாகச் சொல்வார். அதற்கடுத்து தன் கரியரைச் செதுக்கியதில் பாலுமகேந்திராவுக்கும் பெரும் பங்குண்டு என்பார்.
“அந்த டைரக்டர்னா கதை சொல்லலைன்னாகூட ஓகே சொல்லிடுவேன்” என்று சொல்லும் இயக்குநர், வெற்றிமாறன்.
‘காதல் கொண்டேன்’ படத்தின் க்ளைமாக்ஸ் ‘திவ்யா.. திவ்யா’ காட்சிக்குத் திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டலின்போது அழுதிருக்கிறார்.
காரில் எப்போதும் இருப்பது இளையராஜாவின் பாடல்கள். ராஜாவின் மிகப்பெரிய ரசிகன் தனுஷ்.