கடைசி ஒரு ஓவரில் 15 ரன்கள் தேவை என்றால் ஃபிரஷர் தோனிக்கு அல்ல, பௌலருக்கு தான் என்கிறார் இயன் பிஷப். தோனியின் டாப் 7 தோனியின் டாப் 7 ஃபினிஷ்க்கள் இதோ…
2006-ம் ஆண்டு. 290 ரன்களை டார்கெட்டாக நிர்ணயிக்கிறது பாகிஸ்தான். முதல் இரு விக்கெட்டுகள் விரைவாக விழ, இறுதியில் யுவராஜ் மற்றும் தோனி 102 ரன்கள் பாட்னர்ஷிப்போடு வெற்றி பெறுகிறது இந்தியா. 13 பவுண்டரிக்கள் அடித்து 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் தோனி.
2013-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடர் இறுதி போட்டியின் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட நான்கே பந்துகளில் ஆட்டத்தை முடித்தார் தோனி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2012-ம் ஆண்டு முத்தரப்புத் தொடரின் போட்டி ஒன்றில் கடைசி நான்கு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட மிக பிரமாண்ட சிக்ஸரோடு வெற்றியைப் பறித்தார் தோனி.
தடை காலத்தில் இருந்து ஐ.பி.எல் களத்திற்கு சி.எஸ்.கே திரும்பிய ஆண்டு. பெங்களூரு நிர்ணயித்த 206 என்ற டார்கெட்டை 2 பந்துகள் மீதமிருக்க சிக்ஸரோடு முடித்தார் தோனி (70*- 34 பந்துகள்)
2016-ம் ஆண்டு புனே அணியில் தோனி இருந்த நேரம். கடைசி ஒரு ஓவரில் 23 ரன்கள் தேவை. அக்சர் படேல் வீசிய அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர் அடித்து கெத்தாக ஃபினிஷ் செய்தார் தோனி.
2010-ம் ஆண்டு ஐ.பி.எல் Qualifier. இர்பான் பதான் பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸ் அடித்து ஆக்ரோஷமாக கத்தி செல்லும் தோனியை யார் தான் மறக்கமுடியும். அந்தாண்டு முதல் முறையாக கோப்பையையும் தட்டித் தூக்கியது சென்னை அணி.
“Dhoni finishes of in style” என்று ரவி சாஸ்திரியின் வரிகள் ஒலிக்க லான்-ஆனுக்கு மேல் தோனி அடித்த அந்த உலகக்கோப்பை வின்னிங் சிக்ஸர் தான் பலருடைய வாழ்க்கையிலும் சிறந்த தருணம்.