கிரிக்கெட் என்பது இந்தியர்களின் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன விளையாட்டு. இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை இங்கு பார்ப்போம்.
M.S. Dhoni: The Untold Story இந்தியாவின் தலைசிறந்த கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இது சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியானது.
83 இந்திய கிரிக்கெட்டின் இன்றைய ஆதிக்கம் 1983-ம் ஆண்டு தொடங்கியதே. கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்க அந்த மகத்தான பயணம் குறித்த இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.
Lagaan அமீர் கான் நடிப்பில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று ஆஸ்கர் வரை சென்றது.
Azhar படம் Match fixing புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்ற இந்திய கேப்டன் அசாருதீன் குறித்தான இத்திரைப்படம் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் வெளியானது.
Sachin: A Billion Dreams கிரிக்கெட்டின் கடவுளான போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரே நடிக்க டாக்கு-ட்ராமா வடிவில் 2017-ம் ஆண்டு வெளியானது.
Jersey நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த தெலுங்கு திரைப்படம் ஒரு கிரிக்கெட் வீரரை வாழ்க்கை போராட்டத்தை மிக நெகிழ்ச்சியுடன் பேசுகிறது.
Chennai 600028 வெங்கட் பிரபுவின் முதல் படமான இது வடசென்னை இளைஞர்கள் வாழ்க்கையின் வாயிலாக கிரிக்கெட்டை கொண்டாட்டத்துடன் காட்சிப்படுத்துகிறது.
Jeeva வெகு சில படங்களே கிரிக்கெட்டின் அரசியலை பேசியிருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா
Kanaa அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கிராமத்தில் இருந்து தேசிய அணிக்கு ஆட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கனவை பற்றி பேசியிருக்கிறது.