அடுத்த மகாசங்கமம் ஆரம்பிச்சிட்டாங்க… டிஆர்பி உயர்வுக்கு இது புது வழியா?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : எப்படிப்பா ஒரு வீட்ல அப்பாவும் பையனும் ஒரே மாதிரி இருக்கீங்க கொஞ்சம் காசு செலவு பண்ணக்கூடாது வீட்டுக்கு யாரும் சொந்தக்காரங்க வரக்கூடாது இப்படியெல்லாம் இருந்தா வாழ்க்கை எப்படி ஹேப்பியா இருக்கும்?

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி. தொடக்கத்தில் நன்றாக வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் சமீப வாரங்களாக சறுக்கலை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாக்யலட்சுமி சீரியல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்று சொல்லாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போது கண்ணன் வீட்டுக்கு வந்தானோ அன்றில் இருந்தே சீரியல் படுத்துவிட்டது. விறுவிறுப்பாக ஒன்றும் போகவில்லை. கடை திறக்கும்போது கூட ஒரு பரபரப்பு இல்லாமல் என்ற இந்த சீரியல் சகோதர ஒற்றுமைக்கு பெயர் போனது. ஆனால் இப்போது இவர்களுக்குள் ஒற்றுமை இருந்தாலும் முல்லைக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கும் வேலை மற்ற இருவருக்கும் பிடிக்கவில்லை.

இதனால் பெயரளவில் பாண்டியன் ஸ்டோர்ஸ ஒன்றாக இருந்தாலும், மனதளவில் ஒருவர் மீது ஒருவர் கோபமாக உள்ளது நன்றாக தெரிகிறது. தொடக்கத்தில் இருந்து ஒற்றுமையையே பார்த்து பழங்கிய இந்த சீரியல் ரசிகர்களுக்கு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஈர்ப்பை ஏற்படுத்த தவறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த இரண்டு சீரியல்களும் டிஆர்பியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், இவற்றை இணைத்து தற்போது மகா சங்கமம் என்ற பெயரில் இன்றுமுதல் ஒளிபரப்பாக உள்ளது. பாக்யலட்சுமி சீரியலில் தாத்தாவின் பிறந்த நாள் விழாவுக்கு அனைவரும் ஒன்றாக கூடுகின்றனர். இதற்காக வழக்கம்போல் பாண்யன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒரு வேனை பிடித்துக்கொண்டு சென்னை வருகிறது.

பாக்யாவின் வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அப்போது கோபி என்ட்ரி. இவர்கள் வந்தது பிடிக்காத கோபி பாக்யாவை தனியாக அழைத்துச்சென்று இவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட வேண்டும் 2 மணி நேரம் டைம் என்று சொல்கிறார்.  அதேபோல் கோபியின் மகன் செழியனும் இதையே சொல்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும்என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், எப்படிதான் கோபி சொன்னாலும் ஒரு வாரம் இங்கதான் டெரா என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.