நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இதன்போது வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் உண்டு.
இவ்வாறு திண்டாடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இதன்படி, வடமேல் மாகாண சபை பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
நாளைய தினம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி என்பதனால் இன்றே விரைந்து விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பிக்க இந்த இணைப்பை அழுத்தவும் |
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும்.. |
பாடம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும் Subject List (Vacancy) & Qualifications – Sinhala Medium |
விண்ணப்பிக்கும் முறை தொடர்பிலும், மாதிரி விண்ணப்பம் குறித்து அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும் |
விண்ணப்ப முடிவு திகதி – 2022.05.10
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்
Source – www.psc.nw.gov.lk