புதுடெல்லி: இந்தியாவில் வரும் 18-ஆம் தேதி விவோ நிறுவனத்தின் X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ நிறுவனம் உலகம் முழுவதும் போன்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் கடந்த ஏப்ரல் வாக்கில் சீனாவில் X80 மற்றும் X80 புரோ என இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. தற்போது இந்த X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா உட்பட உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது விவோ. இந்தியாவில் விரைவில் இந்த போன் அறிமுகமாக உள்ளது.
X80 சிறப்பு அம்சங்கள்: 6.78 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், பின்பக்கத்தில் மூன்று கேமரா. 50 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் வொய்ட் ஆங்கிள் + 12 மெகாபிக்சல் போர்ட்ரைட் கேமரா இடம் பெற்றுள்ளது. 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா, 4500mAH பேட்டரி, 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 5ஜி சப்போர்ட் இந்த போனில் உள்ளது.
X80 புரோ சிறப்பு அம்சங்கள்: இந்த போன் இரண்டு சிப்செட் வேரியண்ட்டுகளில் வெளிவந்துள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 48 மெகாபிக்சல் வொய்ட் ஆங்கிள் + 12 மெகாபிக்சல் போர்ட்ரைட் கேமரா + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா இடம் பெற்றுள்ளது. மற்றபடி பேட்டரி, டிஸ்பிளே, சார்ஜிங் சப்போர்ட், 5ஜி இணைப்பு மாதிரியானவை X80 புரோ போனில் உள்ளது. சீன தேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவில் இதன் விலை அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.