இந்த பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் ஆபத்தை ஏற்படுத்துமாம்!


 
இஞ்சி சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது

பல நன்மைகளை கொண்டிருந்தலும் அதிகம் இஞ்சி சேர்த்து கொள்வதால் ஏற்படும் முக்கிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த  பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் ஆபத்தை ஏற்படுத்துமாம்!

  • இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது இதய படபடப்பு, மங்கலான கண்பார்வை மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை இஞ்சி ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் இப்பழக்கம் குறைந்த ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
  •  பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் இஞ்சியை உட்கொள்வதை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும். அதிகப்படியான இஞ்சி நுகர்வு கர்ப்ப காலத்தில் கடும் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும். 
  •  அதிகமாக இஞ்சியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக இஞ்சி நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடும். 
  •  இஞ்சி பித்த உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால் வயிறு காலியாக உள்ள போது இது அதிகப்படியான இரைப்பை தூண்டுதலுக்கு வழிவகுக்கலாம், இதனால் செரிமானக் கோளாறு, எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
  •   சில நேரங்களில் அதிக இஞ்சி நுகர்வு, அலர்ஜிகளை ஏற்படுத்தும். தோலில் தடிப்புகள், கண் சிவத்தல், மூச்சுத் திணறல், அரிப்பு, உதடு வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டையில் அசௌகரிய உணர்வு உள்ளிட்ட சில பொதுவான அலர்ஜிகள் ஏற்படலாம். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.