ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்றும் நாளையும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கையில், எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த சமையல் எரிவாயு உடனான கப்பலை நாளைய தினம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்