இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.சனத் நிசாந்தவின் இல்லம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம் நகரில் உள்ள சனத் நிசாந்தவின் இல்லத்திற்கு அரசாங்க எதிர்ப்பு போராட்டகாரர்கள் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இன்று கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் கூட்டத்தில் சனத் நிசாந்தவும் இருந்ததாக கூறப்படுகிறது.
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இலங்கையில் பல்வேறு இடங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
— Vanesha Fernando (@Vaneshafdo) May 9, 2022