இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதமர் இல்லதத்தில் இன்று பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் சந்திப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அதன் பிறகு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது,
இன்று அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் வன்முறையைத் தூண்டும் எவரையும் கைது செய்தல் மற்றும் வழக்குத் தொடர்வது உட்பட முழுமையான விசாரணையை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
மகிந்த ராஜபக்ச ஆதரவாளரை அடித்து குப்பை வண்டியில் போட்ட மக்கள்! பரபரப்பு வீடியோக்கள்
இன்று காயமடைந்தவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள் மற்றும் தீவு முழுவதும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.