இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபக்சே பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தொடர் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார்.
இதற்கிடையே இலங்கையில் தொடரும் இலங்கையில் பிரதமர் ராஜபக்சே ராஜினிமா செய்துள்ளார். இந்நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற காரை சூழ்ந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது அமரகீர்த்தி எம்.பி. போராட்டகாரர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆளுங்கட்சி எ.பி.யான அமரகீர்த்தி உயிரிழந்தார்.