எலக்ட்ரிக் கார் vs பெட்ரோல், டீசல் கார்: எது பெஸ்ட் அப்ஷன்?

பெட்ரோல், டீசல் கார்களை விட எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்து ஓட்டும் போது பெரும் அளவில் செலவு குறைவதால் பலர் அதை வாங்கலாம என நிணைக்கின்றனர்.

சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?

எனவே பெட்ரோல், டீசல் கார்களை தவிர்த்து பெட்ரோல், டீசல் கார்களை வாங்கும் போது என்னவெல்லாம் சாதகம், பாதகம் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். அதை பார்த்த பிறகு எலக்ட்ரிக் கார் வாங்குவதா? இல்லையா? என்பதை முடிவு செய்யுங்கள்.

 குறைந்த பயண செலவு

குறைந்த பயண செலவு

எலக்ட்ரிக் கார்களை அதிகபட்ச மின்சார கட்டணமான யூனிட் 10 ரூபாய் வரையில் செலவு செய்து சார்ஜ் செய்தாலும், அது பெட்ரோல், டீசல் கார்களை விட குறைவாக உள்ளது.

குறைவான பராமரிப்பு கட்டணம்

குறைவான பராமரிப்பு கட்டணம்

பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது சர்வீஸ்க்கு செலவு செய்யும் கட்டணம் எலக்ட்ரிக் காரில் மிகவும் குறைவு. எனவே பராமரிப்பு கட்டணம் பெரும் அளவில் மிச்சமாகும்.

வரி விலக்கு

வரி விலக்கு

2020-2021 நிதியாண்டு முதல் கடனில் எலக்டிரிக் கார் வாங்கினால், வருமான வரி சட்டப் பிரிவு 80EEB கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும்.

 விலை
 

விலை

பெட்ரோல் டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் கார் விலை அதிகம். அதுவே இதை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவதற்காக முதல் காரணமாகக் கூறுகின்றனர்.

சார்ஜிங் சிக்கல்

சார்ஜிங் சிக்கல்

மின்சார கார்களை வீட்டில் சார்ஜ் செய்யலாம். ஆனால் வெளியில் செல்லும் போது சார்ஜ் குறைந்துவிட்டால் சார்ஜிங் ஸ்டேஷனில் நீண்ட நேரம் காத்திருந்து சார்ஜ் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் நிலையங்களை விட இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் குறைவாகத்தான் உள்ளது.

 பயண தூரம்

பயண தூரம்

இந்தியாவில் இப்போது தயாரித்து விற்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார்களில் ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 350 கிலோ மீட்டர் வரையில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

 ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை

எலக்ட்ரிக் கார்களை அதிகம் உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு ஊக்கத்தொகை வழங்கினாலும் அதை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இன்சூரன்ஸ் கட்டணம்

இன்சூரன்ஸ் கட்டணம்

எலக்ட்ரிக் கார்களின் மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் கட்டணத்தை ஐஆர்டிஏஐ 15 சதவீத தள்ளுபடி விலைக்கு வழங்குகிறது. ஆனால் விரிவான காப்பீடு கட்டணம் பெட்ரோல், டீசல் கார்களை விட அதிகமாக உள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் போது காற்று மாசு பூஜ்ஜியமாகக் குறையாது என்றாலும், பெட்ரோல், டீசல் கார்களை விட காற்று மாசு குறைவே.

வலுவான செயல்திறன்

வலுவான செயல்திறன்

பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும் போது வலுவான செயல்திறன் படைத்ததாக எலக்ட்ரிக் கார் உள்ளது. எலக்ட்ரிக் காரில் பயணம் செய்யும் போது பெட்ரோல் டீசல் கார்களில் செல்வதைவிட அலுப்பு குறைவாகவே இருக்கும் என கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Electric Car Vs Petrol, Diesel car: Benefits & Drawbacks

Electric Car Vs Petrol, Diesel car: Benefits & Drawbacks | எலக்ட்ரிக் கார் vs பெட்ரோல், டீசல் கார்: எது பெஸ்ட் அப்ஷன்?

Story first published: Monday, May 9, 2022, 22:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.