இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, 21,008.48 கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீட்டை அறிவித்தது.
6 மாதத்தில் ரூ.88,000 கோடியை காலி செய்த சோமேட்டோ.. எப்படி தெரியுமா?
மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பொது பங்கு வெளியீடு, மே 9-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாள் முதல் ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை அதன் பாலிசிதாரர்கள் அதிகளவில் வாங்கிக் குவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
விற்கப்பட்ட பங்குகள் எவ்வளவு?
ஐபிஓ மூலம் மொத்தமாக எல்.ஐ.சியின் 16.2 கோடி பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்டது. இறுதி நாள் முடிவில் 2.95 மடங்கு அதிகமாக விற்பனையாகி மொத்தமாக 47.83 பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளார்கள்.
பங்குகளின் விலை
எல்ஐசி பங்குகள் நிறுவனம் மற்றும் நிறுவனம் அல்லா முதலீட்டாளர்களுக்கு 949 ரூபாய் ஒரு பங்கு என குறைந்தது 15 பங்குகள் ஒரு லாட் என விற்பனை செய்யப்பட்டது. ரீடெயில் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு 45 ரூபாய் தள்ளுபடி விலையில் ஒரு பங்கு 904 ரூபாய் எனவும் 15 பங்குகள் ஒரு லாட் எனவும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 889 ரூபாய் ஒரு பங்கு விற்பனை செய்யப்பட்டது.
முதலீட்டாளர்கள்
இந்நிலையில் கடைசி நாளில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 2.83 மடங்கு வரையில் எல்ஐசி பங்குகளை வாங்கினர். நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 2.91 மடங்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ரீடெயில் முதலீட்டாளர்கள் 1.99 மடங்கு பங்குகளை வங்கியுள்ளனர். எல்ஐசி ஊழியர்கள் 4.29 மடங்கு பங்குகளை வாங்கியுள்ளார்கள். பாலிசிதாரர்கள் 6.11 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்கள். மொத்தமாக எல்ஐசி பங்குகள் ஐபிஓ மூலம் 2.95 மடங்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது.
ரீடெயில் பங்குகள்
நிறுவன ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கூடுதலாக ரீடெயில் பிரிவிலும் எல்ஐசி பங்குகளை வாங்கலாம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் குறைந்தபட்சமாக 1.99 மடங்கு மட்டுமே ரீடெயில் முதலீட்டாளர்கள் செய்துள்ளனர். எல்.ஐசி பாலிசி இல்லாதவர்கள் என்றே இருக்க முடியாது. அதனால் தான் ரீடெயில் முதலீட்டாளர்கள் பலர் பாலிசிதாரர்கள் பிரிவில் வாங்கியிருப்பார்கள் என கூறுகின்றனர்.
அடுத்து என்ன?
எல்.ஐ.சி பங்குகள் 2.95 மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ளதால் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே பங்குகள் ஒதுக்கப்படும். மே 12-ம் தேதி எல்ஐசி ஐபிஓ பங்குகள் ஒதுக்கப்படும். பங்குகள் கிடைக்காதவர்களுக்கு மே 13-ம் தேதி ரீஃபண்ட் செய்யப்படும். ஒதுக்கப்பட்ட பங்குகள் மே 16-ம் தேதி டீமேட் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். பொதுச்சந்தையில் மே 17-ம் தேதி பட்டியலிடப்படும்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது கண்டிப்பாக முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIC IPO: Total subscription at 2.95 times on final day
LIC IPO: Total subscription at 2.95 times on final day | எல்ஐசி ஐபிஓ.. கடைசி நாளில் 2.95 மடங்கு வரை வங்கி முதலீட்டாளர்கள் அசத்தல்!