ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய திட்டம்.. வேலை இல்லாதோருக்கு இன்சூரன்ஸ்.. இந்தியர்களுக்கு நன்மை..!

வல்லரசு நாடுகளுக்கு இணையாகத் தனது கச்சா எண்ணெய் வருமானத்தைப் பயன்படுத்தப் பிற துறைகளில் வர்த்தகத்தை உருவாக்கித் தொடர்ந்து வளர்ச்சி அடையத் திட்டமிட்டு வரும் வளைகுடா நாடுகள் மத்தியில் தற்போது கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இந்நிலையில் புதிய ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் வேலையில்லாதோருக்கு இன்சூரன்ஸ் அளிக்க முடிவு செய்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE).

இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் UAE.. யாருக்கெல்லாம் நன்மை..!

ஐக்கிய அரபு எமிரேடஸ்

ஐக்கிய அரபு எமிரேடஸ்

இன்று ஐக்கிய அரபு எமிரேடஸ் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு ஊழியர்கள், நிறுவனங்கள், முதலீடுகளை ஈர்க்க வேண்டியும், நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் விதமாகவும் வேலையில்லாதோருக்கான இன்சூரன்ஸ் போன்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

காப்பீடு

காப்பீடு

காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குச் சில குறிப்பிட்ட அளவிலான பணத்தை உதவித் தொகையாகப் பெறுவார்கள் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், வர்த்தக மையமான துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சந்தை
 

தொழிலாளர் சந்தை

தொழிலாளர் சந்தை போட்டித்தன்மையை வலுப்படுத்துவதும், தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பை ஒரு குடையின் கீழ் வழங்குவதும், அனைவருக்கும் நிலையான பணிச்சூழலை உருவாக்குவதும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேடஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

ஆனால் இத்திட்டம் யாருக்கு பொருந்தும் என்பதைத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. உதாரணமாக அமெரிக்காவில் இத்தகைய திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேடஸ் இத்திட்டத்தை அந்நாட்டு மக்களுக்கு மட்டும் அளிக்குமா அல்லது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அளிக்குமா என்பது அறிவிக்கவில்லை.

 வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகளான கத்தார், ஓமன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை குடிமக்களுக்குச் சில வகையான வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்குச் சில குறிப்பிட்ட ஆதரவை வழங்கி வருகிறது. மேலும் பஹ்ரைனில் வசிக்கும் குடிமக்கள் அல்லாத தொழிலாளர்களுக்கு அதாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இத்தகைய சேவையை அளிக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள் என்பது அபுதாபி (தலைநகரம்), அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் சேர்ந்தது தான்.

UAE மக்கள் தொகையில் 35% இந்தியர்கள்,15% அமீரகம்,10.7% பங்களாதேஷ்,9.7% பாகிஸ்தானியர்,8.8% எகிப்தியர்கள்,5.5% பிலிப்பைன்ஸ்,3.1% இந்தோனேஷியன்,2.0% ஏமன்,1.6% ஜோர்டானியன்,1.3% சூடானியர்கள்,9.7% மற்ற நாட்டவர்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE Govt to introduce unemployment insurance today; Indians may benefit

UAE Govt to introduce unemployment insurance today; Indians may benefit ஐக்கிய அரபு எமிரேடஸ் புதிய திட்டம்.. வேலையில்லாதோருக்கு இன்சூரன்ஸ்.. இந்தியர்களுக்கு நன்மை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.