காதலி மீதுள்ள ஆத்திரத்தில் காதலன் செய்த செயல் 7 அப்பாவி பொத மக்களை பலி வாங்கி இருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்ததூரில் நடந்த கட்டடத்தை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 9 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடனடியாக விரைந்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் அதிகாலையில் அந்த கட்டிடப் பகுதிக்குள் நுழைந்து பைக்கு ஒன்றுக்கு தீ வைக்கிறார்.
பைக் நிறுத்தும் இடத்தில் ஒரு பைக்குக்கு அவர் தீ வைத்ததால் அந்த தீ அங்கிருந்து அனைத்து வாகனங்களுக்கும் பரவுகிறது.
அதன் பின்னர் கட்டிடமே தீக்கிரையாகிறது. இதை அடுத்து 27 வயதான சஞ்சய் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை நான் காதலித்து வந்தேன்.
அவளுக்கு அவ்வப்போது பண உதவிகள் செய்து வந்தேன். ஆனால் திடீரென்று அவளுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அவளுடன் சண்டை போட்டேன். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாள்.
நான் செலவு செய்த பணத்தையாவது திருப்பிக் கொடு என்று கேட்டேன். அதற்கு அவளும் அவளது தாயும் பணத்தை தர முடியாது என்று சொல்லி என்னிடம் திட்டிவிட்டார்கள்.
இதனால் தான் ஆத்திரத்தில் அதிகாலையில் சென்று அவளது பைக்கிற்கு தீ வைத்த போது அங்கிருந்து எல்லா வாகனங்களும் தீப்பிடித்து கட்டிடமே தீப்பற்றிவிட்டது.
இதனால் நான் அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
கட்டிடம் தீப்பிடித்து எறிந்த போது அந்த இளைஞனின் காதலியும் அவளது தாயும் பாதுகாப்பாக வெளியேறி விட்டார்கள்.
ஆனால் இரண்டு கட்டிட தொழிலாளர்கள், ஒரு கல்லூரி மாணவி, பேருந்து டிப்போ ஊழியர் , மதுபான கடை ஊழியர், வீட்டு வேலை செய்து வந்த பெண் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது தீப்பற்றியதால் கட்டிடத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்.
காதலியை பழி வாங்குகிறேன் என்று ஒரு இளைஞர் செய்த முட்டாள் தனமான செயலால் ஏழு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பலியாகி இருப்பது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.