கேரட், முள்ளங்கியில் ஒட்டகச்சிவிங்கி; பாகற்காயில் முதலை; களைகட்டிய நீலகிரி காய்கறிக் கண்காட்சி!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கோடைவிழா நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழாக்கள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான கோடை விழா இன்று கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 7ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த கண்காட்சியில் டன் கணக்கான காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

காய்கறி கண்காட்சி

இது மட்டுமல்லாது காய்கறிகளைக் கொண்டு சிறப்பு வடிவங்களை உருவாக்கியிருந்தனர். 1.50 டன் கேரட் மற்றும் 600 கிலோ முள்ளங்கியைக் கொண்டு குட்டியுடன் இருக்கும் ஒட்டகச்சிவிங்கியை பிரமாண்டமாக வடிமைத்து அசத்தியிருந்தனர். பாகற்காய்களைக் கொண்டு முதலை மற்றும் டிராகனை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். வண்ண குடை மிளகாய்களைக் கொண்டு அழகிய கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட பஞ்சவர்ணக்கிளிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு மீன், ரங்கோலி, செல்ஃபி ஸ்பாட் போன்றவற்றையும் உருவாக்கியிருந்தனர். பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கங்காரு, பாண்டா, டோரா, கடிகாரம் போன்ற வடிவங்களும் ஈர்த்தன.

காய்கறி கண்காட்சியின் சிறப்புகள் குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ” தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறி வளங்களை பறைசாற்றும் வகையில் பல்வேறு காட்சி திடல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வகையான காய்கறிகளும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.

காய்கறி கண்காட்சி

நீலகிரியின் முக்கியக் கொள்கையான இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இயற்கை வேளாண்மை காட்சி திடல்கள் தோட்டக்கலைத்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந்திப் நந்தூரிதொடங்கி வைத்தார். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.