கொரோனா தொற்று குறைந்து மக்கள் பயணம் செய்வது தொடங்கியுள்ளதால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேம்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை உள்நாட்டு விமான போக்குவரத்து எட்டும் என கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், உள்நாட்டுப் போக்குவரத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10.5 மில்லியனாக இருந்தது. இப்போது அதிலிருந்து 5 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவு விலை 12 வருட உச்சம்.. மக்கள் வயிற்றில் அடிக்கும் விலைவாசி உயர்வு.. என்ன காரணம்..?!
வெளிநாட்டு விமான பயணம்
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரித்து 1.85 மில்லியனாக உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் குறைந்தால், விமான எரிபொருள் கட்டணம் குறைந்து விமான கட்டணமும் குறைந்தால் இது இன்னும் அதிகரிக்கும் என்ற ICRA ரேட்டிங் ஏஜன்ஸி கூறியுள்ளது.
உள்நாட்டு விமான பயணம்
2019-ம் ஆண்டு ஏரல் மாதம் உள்நாட்டு விமான பயணம் ஆண்டுக்கு 83 சதவீதம் அதிகரித்து 11.0 மில்லியனாக இருந்தது. 2022 ஏப்ரல் மாதம் 10.5 மில்லியனாஃப உள்ளது. இதுவே மார்ச் மாதம் 10.7 மில்லியனாக இருந்தது.
ஒரு விமானத்தின் பயணிகள் எண்ணிக்கை
ஏப்ரல் மாதம் சரசியாக ஒரு உள்நாட்டு விமானத்தில் 128 நபர்கள் பயணித்துள்ளனர். அதுவே மார்ச் மாதம் 133 ஆக இருந்தது.
சர்வதேச பயணிகள்
கொரோனா காலத்தில் சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்தது. தற்போது கொரோனா தொற்று சரிந்து வருவதால் மார்ச் 27-ம் தேதி சர்வதேச விமான பயணத்துக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அடுத்த ஒரு மாதத்தில் 1.85 நபர்கள் வெளிநாட்டுப் பயணம் செய்துள்ளார்கள். அதுவே 2019-ம் ஆண்டு 1.83 மில்லியனாக இருந்தது.
விமான எரிபொருள்
பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, மே மாதம் விமான எரிபொருள் 89 சதவீதம் அதிகரித்துள்ளது எனவே விமான கட்டணமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
Domestic air traffic close to reaching pre-Covid levels; international passenger traffic for Indian airlines exceeds pre-Covid levels
Domestic air traffic close to reaching pre-Covid levels; international passenger traffic for Indian airlines exceeds pre-Covid levels | கொரோனாவுக்கு பிறகு மீண்டும் இயல்புக்குத் திரும்பிய உள்நாட்டு விமான போக்குவரத்து!