சுவிஸ் நிறுவனத்தை கைப்பற்றிய ஹெச்சிஎல்.. ரோஷ்னி நாடார் அசத்தல்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் ஷிவ் நாடார்-ஐ தொடர்ந்து தற்போது ரோஷ்னி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஹெச்சிஎல் தனது வர்த்தக விரிவாக்கம், சேவை விரிவாக்கம், சர்வதேச சந்தை வர்த்தகம் ஆகியவற்றுக்காகச் சுவிஸ் நாட்டு நிறுவனத்தை வாங்கியுள்ளது.

லாக்டவுன் காலத்தில் டெக் நிறுவனங்களின் மதிப்பீடு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களை கைப்பற்றுவதை தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது வேட்டையைத் துவங்கியுள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பிரிட்டன் கிளை நிறுவனமான – ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் UK லிமிடெட், சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிஜிட்டல் வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் ஆலோசனை நிறுவனமான Confinale AG-ஐ வாங்க முடிவு செய்துள்ளது.

Confinale AG நிறுவனம்

Confinale AG நிறுவனம்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் UK லிமிடெட் நிறுவனம் Confinale AG நிறுவனத்தை CHF 53 மில்லியன் அதாநது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 4,183 கோடி ரூபாய் டாலரில் 54 மில்லியன் தொகையைக் கொண்டு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. கான்ஃபினேல் நிறுவனத்திற்குச் சுவிஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அலுவலகத்தை வைத்துள்ளது.

Avaloq தொழில்நுட்பம்
 

Avaloq தொழில்நுட்பம்

2012 இல் நிறுவப்பட்ட கான்ஃபினேல், வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் சிறப்புத் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் Avaloq ப்ரீமியம் செயல்படுத்தும் கூட்டாளியாகவும் விளங்குகிறது.

சேவைகள்

சேவைகள்

Avaloq தொழில்நுட்ப பிரிவில் அதிகளவிலான வல்லுனர்கள், சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப சேவைகள், வேகமாக இம்பிளிமென்டேஷன் செய்யும் திறன்களைக் கொண்டு உள்ளது கான்ஃபினேல். இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் கான்ஃபினேல் சேவைகளை உலகம் முழுவதும் இருக்கும் ஹெச்சில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

2.44% உயர்வு

2.44% உயர்வு

கான்ஃபினேல் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இன்று மும்பை பங்குச்சந்தை சரிவில் இருந்தாலும் ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 2.44 சதவீதம் உயர்ந்து 1075.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 நிறுவனங்களில் அதிகம் வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்சிஎல் 2வது இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HCL Tech acquisition Swiss firm Confinale for business, service expansion

HCL Tech acquisition Swiss firm Confinale for business, service expansion சுவிஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய ஹெச்சிஎல்.. ரோஷ்னி நாடார் அசத்தல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.