கடந்த சில ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகமாக தங்கம் கடத்தி வரப்பட்டு வருகிறது. தங்கம் கடத்துபவர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 31.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று துபாயிலிருந்து, துபை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த ஒருவரை விமான நிலைய சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
அண்ணா சர்வதேச விமான நிலைய சர்வதேச முனையத்தின் வெளியேறும் பகுதியில் வைத்து நடைபெற்ற இந்த சோதனையின் போது, அந்த பயணி அவரது மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
686 கிராம் எடைகொண்ட 24 காரட் தூய்மையான இந்த தங்கத்தின் மதிப்பு 31.99 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அந்த பயணி இடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.