ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தகேத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோதி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகலாய சாலை வழியாக தேரா கி காலி வனப் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரு பகுதிகளிலிருந்தும் தேடுதல் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்த பதுங்கு குழியில் இருந்து 100 வெடி மருந்துகள், உணவுப் பொருட்கள், சாலணிகள், காலுறைகள், டார்ச் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடம்- ஆய்வில் தகவல்