தனியாக வசித்த கோடீஸ்வர தம்பதியை கொன்று புதைத்தது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்


தமிழகத்தை அதிரவைத்த கோடீஸ்வர தம்பதி கொலை வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா அமெரிக்காவில் உள்ள தங்களது மகளை பார்க்க சென்று, அங்கேயே சில காலம் தங்கியுள்ளனர். இடையில் ஒருமுறை மட்டும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் பண பரிவர்த்தனைக்காக சென்னை வந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர்.

அப்பொழுதுதான் இவர்களை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை எடுத்துக்கொண்டு தமிழகத்தை விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். கொலை செய்த கிருஷ்ணாவிற்கு ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது வீட்டிலேயே அறை கொடுத்துள்ளார்.

கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து சில வருடங்களிலேயே டைவர்ஸ் ஆகியுள்ளது. அந்த பெண்ணும் ஒரு தமிழ் பெண். அவர் தற்போது கிருஷ்ணாவுடன் இல்லை. இவர்கள் இருவருக்கும் 15 வயதில் ஒரு பையன் இருக்கிறார்.

தனியாக வசித்த தம்பதியை கொன்று உடல்களை பண்ணை வீட்டில் புதைத்த கார் ஓட்டுனர்! பகீர் சம்பவம்

அவர் தற்போது டார்ஜிலிங்கில் படித்து வருகிறார்.
இந்த சூழலில் எப்போதோ ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 40 கோடி பண பரிவர்த்தனை பற்றி பேசியுள்ளார். அந்த பணம் ஸ்ரீகாந்த் வீட்டில் இருப்பதாக நம்பிய கிருஷ்ணா அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்.

ஆனால் சம்பவத்தின் போது பீரோவில் பணம் இல்லாத நிலையில் 1000 சவரன் நகைகள் மட்டுமே இருந்தது.
அதை கொள்ளையடித்த இருவரும் தம்பதியை கொன்றுள்ளனர்.
பின்னர் தான் நேபாளம் தப்பும் முயற்சியில் பொலிசில் சிக்கியுள்ளனர்.

கொலையாளி கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், ஸ்ரீகாந்திடம் நான் 7 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். நான் வேலை பார்த்த அளவுக்கு ஸ்ரீகாந்த் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மகன் படிப்புக்கு உதவும்படி ஸ்ரீகாந்திடம் உதவி கேட்டேன்.

அவர் முடியாது எனக் கூறிவிட்டார்.

அவரிடம் நிறைய பணம் இருந்தும் அவர் உதவவில்லை. தீபாவளி என்றால் நகைகள், துணிகள் மிகவும் ஆடம்பரமாக குடும்பத்துடன் கொண்டாடுவார். அவர் வீட்டிலேயே இருக்கும் எனக்கும் ஒரு கிலோ இனிப்பு பொட்டலம் மட்டுமே கொடுப்பார்.

அப்போதுதான் ஈசிஆரில் ஒரு நிலம் விற்கப்பட்டது எனக்கு தெரியவந்தது. அந்த பணம் ரூ.40 கோடி அவரது வீட்டில் இருக்குமென நினைத்தே திட்டமிட்டோம். ஆனால் பணமில்லை. அதற்கு பதிலாக நகைகள் நிறைய இருந்தன. உண்மை வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதால் இருவரையும் கொன்று புதைத்தோம் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.