மும்பையில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளின் இடங்கள், அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
ஹவாலா பணப் பரிமாற்றத் தரகர்கள், போதைப் பொருள் கடத்தல்கார்களுக்குத் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த தேசியப் புலனாய்வு முகமை இது குறித்து பிப்ரவரியில் வழக்குப் பதிந்தது.
இந்நிலையில் இன்று மும்பையின் பல்வேறு இடங்களில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் வீடுகள், கட்டடங்கள், ஹவாலா தரகர்களின் வீடுகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சலீம் புரூட் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.