நிதி அமைச்சகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 நிதியுதவியாக வழங்குகிறது என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது. அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதியமைச்சகம் 30,628 ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?
இந்திய மக்கள் அனுபவிக்கும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் (ரூ.30,628) வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று ஒரு இணையதளத்தில் போலி தகவல் வெளியாகியுள்ளது.
உஷார்
மேலும் அந்த போலி இணையதளத்தில், இந்த நிதி உதவியைப் பெறக் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஐபி
“இந்த போலி தகவல் குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள பிஐபி, இது போல நிதியமைச்சகம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை” என உறுதி செய்துள்ளது.
போலி தகவல்கள் உறுதி செய்வது எப்படி?
இதுபோன்ற தகவல்களை சமூக வலைத்தளங்கள் அல்லது மெசேஜ் மூலம் பெற்றால், அதை உடனே https://factcheck.pib.gov.in என்ற இணைப்பிற்கு அனுப்பி உறுதி செய்யவும்.
புகார் அளிக்க எண்கள்
மேலும் +91-8799711259 வாட்ஸ்அப் எண் அல்லது [email protected] மின்னஞ்சலுக்கு இது போன்ற தகவல்களை அனுப்பியும் உறுதி செய்யலாம் என இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Fact Check: Finance Ministry giving Rs 30,628 to every citizen as financial aid? Here’s the truth behind it
Fact Check: Finance Ministry giving Rs 30,628 to every citizen as financial aid? Here’s the truth behind it | நிதி அமைச்சகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 நிதியுதவியாக வழங்குகிறதா? இதை படிங்க..!