ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத் தொடர்பு துறையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த போட்டிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல சலுகைகளை வழங்கி வருகின்றன.
குறிப்பாக வாய்ஸ் கால் சேவை என்பதோடு மட்டும் அல்லாமல், இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸேவையினையும் வழங்கி வருகின்றன.
குறைந்த வட்டி விகிதத்தில் ‘ஹோம் லோன்’ வழங்கும் 5 வங்கிகள்!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்பினை கண்டுள்ளனர். ஆக சின்ன சின்ன விஷயங்களையும் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இது இன்றைய காலக்கட்டத்தில் பெரும் உதவியாக இருக்கும்.
ப்ரீபெய்டு திட்டங்கள்
குறிப்பாக நடுத்தர குடும்பங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையும் கிடைக்கிறது. இதன் மூலம் இலவச வாய்ஸ் கால், எஸ் எம் எஸ் சேவையும் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இலவச ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி சேவையும் கிடைப்பதால் புதிய படங்களை கூட சில நூறு ரூபாய் செலவிட்டாலே போதுமானது.
பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருந்தால் போதும்
இதே ஒரு தியேட்டரில் சென்று குடும்பத்தோடு புதிய படத்தினை பார்க்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 2000 ரூபாயாவது செலவிட வேண்டியிருக்கும். ஆனால் ஜியோவின் இந்த பிரீபெய்டு திட்டத்தில் 500 ரூபாய்க்குள் இருந்தாலே போதுமானது. குடும்பமே விரும்பிய படங்களை பார்க்க முடியும். இது விலைவாசி அதிகரித்து வரும் இந்த நேரத்தில், உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
4 திட்டங்கள் அறிமுகம்
ஜியோ 4 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது 151 ரூபாய், 333 ரூபாய், 583 ரூபாய், 783 ரூபாய் திட்டங்களாகும். இது 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. 151 ரூபாய் திட்டத்தில் வாய்ஸ் கால் சேவை, எஸ் எம் எஸ், பிரைம் மற்றும் ஜியோ ஆப்கள் வரையில் கொண்டுள்ளது.
ரூ.151 திட்டம்
151 ரூபாய் திட்டம் டேட்டா சேவையினை வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் 3 மாத டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கிறது. இதன் மூலம் 8 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ரூ.333 திட்டம்
333 ரூபாய் திட்டத்தில் தினசரி 1,5 ஜிபி டேட்டா கிடைக்கும்.இதன் மூலம் வரம்பற்ற கால் சேவையும், இலவச எஸ் எம் எஸ் சேவையும் கிடைக்கிறது. அதோடு தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்-ம் கிடைக்கும். இது தவிர ஜியோ சினிமா, ஜியோ செய்திகள், ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்கள் சேவையும் கிடைக்கும். இதன் மூலம் 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும்.
ரூ.583 திட்டம்
583 ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கிறது. தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் – சேவையும் கிடைக்கிறது. இதோடு 3 மாத ஹாட் ஸ்டார் சேவையும், அதனுடன் டிஸ்னி சேவையும் கிடைக்கிறது.
ரூ.783 திட்டம்
783 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மேற்கண்ட திட்டங்களை போல இந்த திட்டத்திலும், அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.
ஆக உங்கள் பட்ஜெட்டிலேயே வீட்டில் இருந்தே விருப்பத்திற்கு ஏற்ப சினிமாக்களை பார்த்துக் கொள்ளலாம்.
Reliance Jio brings new prepaid plans with 3 months of Disney+ hotstar subscription
Reliance Jio offers new prepaid plans with 3 months of Disney+ hotstar subscription/பட்ஜெட் டிப்ஸ்: புதிய படத்தை இலவசமாக பார்க்க ஸ்மார்ட் ஐடியா..!