சென்னை: பல் அடுக்கு வாகன நிறுத்தம், புதிய கட்டிடம் என ரூ.400 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் நவீன மயமாக்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையில் மிகவும் பழமையான ரயில் நிலையம் ஆகும். 100 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ரயில் நிலையம் 1908-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக உள்ள இந்த ரயில் நிலையில் இந்தோ சாராசனிக் பாணியில் கட்டப்பட்டது முறையில் கட்டப்பட்டது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் இங்கிருந்தான் இயக்கப்படுகிறது. 11 நடை மேடைகளுடன் செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களுக்கு என்று இரண்டு நடைமேடைகள் உள்ளன. தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தை ரூ.400 கோடி செலவில் நவீனப்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து வசதிகளும் கொண்டு நவீன ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதில் முக்கியமாக பூந்தமல்லி சாலையில் ரயில் நிலைய முகப்பில் புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது. இந்த பாரம்பரிய கட்டிடத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதைப்போன்று புதிய பார்சல் அலுவலகமும் கட்டப்படவுள்ளது.
ரயில் நிலைய வளாகத்தில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் மேலும் ஒரு வாகன நிறுத்தம் அமைக்கவும் இடம் கண்டறியப்படவுள்ளது. பார்சல்களை கொண்டு செல்ல நகரும் பாலம் அமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து நடைபாதைகள், நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ளவதற்கான டெண்டர் தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கிய நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு திட்டத்தை முடிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.