பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி சிலர் இன்று (09) அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலரிமாளிகைக்கு அப்பாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலும பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில தரப்பினர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில் பிரதமர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினால் நாடு தொடர்ந்தும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகும் என்றும் ,நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான ஒரே தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஆகும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தனர்