பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

ஆந்திராவின் கண்டலேறு அணையில் கடந்த 5-ஆம் தேதி திறக்கப்பட்ட 1,500 கன அடி கிருஷ்ணா நதிநீர் மூன்று நாட்களுக்கு பிறகு தமிழகம் வந்தடைந்தது. 152 கிலோமீட்டரை கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு நதிநீர் வந்தடைந்தது. இதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர்.

image
ஜீரோ பாயிண்டிலிருந்து 25 கிலோமீட்டர் தூரமுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இன்று காலை கிருஷ்ணா நீர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவே வந்தடைந்தது. அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர். நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் மே முதல் ஆகஸ்ட் வரை 6 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு தரப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதையும் படிக்கலாம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழி ‘இந்தி’ – திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.