குருணாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.
காலி முகத்திடலில் மகிந்தவின் குண்டர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அடுத்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடி கூட எவராலும் பிடிக்க முடியாது. முடிந்தால் வந்து மோதிப் பார் என பகிரங்க சவால் விட்ட மேயரின் வீடு இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்கார்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளமையால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலையில் ஏற்பட்டுள்ளது.