சென்னை: சென்னையில் உள்ள போக்குவரத்துக்கழக பேருந்து பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, சென்னை கேகேநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, வடபழனி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், `அரசு போக்குவரத்து பணிமனைகளை, வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கி வருவாய் ஈட்டும் திட்டம் உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின்கீழ் உள்ள 16 பனி மனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிமனைகளை வணிக வளாகங்களுடன் கூடிய நவீனமயக்குவது குறித்து ஆலோசிங்ககப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சிக் குழு நிதி உதவியுடன் விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, வடபழனி பேருந்து பணிமனையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்..