ரஷ்யா தோற்கும், ஏனென்றால் தீமை எப்போதும் தோற்கடிக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவர்கள் முக்கியமானவர்கள் அனைத்தையும் ரஷ்யா மறந்துவிட்டது என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
உக்ரைன் இந்தப் போரில் நல்லவர்கள் தரப்பு என்பதை முழு சுதந்திர உலகமும் பார்க்க முடியும் என்று அவர் கூறினார், தீமை எப்போதும் தோற்கடிக்கப்படும் என்பதால் ரஷ்யா தேற்கும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் வெற்றி தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மேற்கத்திய தலைவர்களும் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர்.
அம்மா திரும்பி வருவிங்களா.. ரஷித் கான் பதிவிட்ட கலங்க வைக்கும் வார்த்தைகள்!
உக்ரைனுக்கு விஜயம் செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,எத்தனையோ பேர் போராடி மடிந்த மிகவும் மதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று கூறினார்.
மேலும் ஜி7 குழுவின் தலைவர்கள், புடினின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கும் அதன் மக்களின் வரலாற்று தியாகங்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.