நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களைக்கொண்ட மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் இன்று (09) அறிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் முடியும் வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.