மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ரன்கள் எடுத்தனர். இதில், இருவருமே தலா நான்கு 6, 3 பவுண்டரிகளை எடுத்தனர். தொடர்ந்து, அஜிங்கியா ரகானே 25 ரன்கள், ரிங்கு சிங் 23 ரன்கள், ஆந்திரே ருசெல் 9 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள், ஜாக்சன் 5 ரன்களை எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ரா 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.