உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் 3 தொலைக்காட்சி சேனல்கள் மீது அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதித்தது.
உலக தலைவர்கள் இடையிலான ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிற நாடுகளின் தலைவரிகள் பங்கேற்று விவாதித்தனர்.
உக்ரைன்-க்கு ஜீரோ வரி.. பிரிட்டன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
கச்சா எண்ணெய், எரிவாயு
அந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான தக்குதலை நடத்தில் வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யவதை தடை செய்யவும் ஜி-7 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர்.
தொலைக்காட்சி சேனல்கள்
மேலும் அதனைத் தொடர்ந்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் விதமாக ரஷ்யாவின் 3 தொலைக்காட்சி சேனல்கள், 27 காஸ்ப்ரோம்பேங்க் நிர்வாகிகள் மற்றும் 8 சைபர் பேங்க் நிர்வாகிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
காஸ்ப்ரோம்பேங்க்கிற்கு சொந்தமான எரிவாயு ஆலைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடையினால் இந்த ஏற்றுமதிகள் பாதிப்படையும். ரஷ்யாவிற்குச் செல்லும் நிதி குறையும் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
விளக்கம்
நாங்கள் காஸ்ப்ரோம்பேங்கின் சொத்துக்களை முடக்கவோ அல்லது பரிவர்த்தனைகளைத் தடை செய்யவோ இல்லை. காஸ்ப்ரோம்பேங்க் பாதுகாப்பான நிறுவனம் இல்லை என்பதை இந்த பொருளாதாரத் தடை மூலம் அறிவுறுத்துகிறோம் என பிடன் தலைமையிலான அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
ரஷ்யர்கள் அதிர்ச்சி
அமெரிக்கர்கள் ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்குக் கணக்கு, நிறுவன உருவாக்கம் மற்றும் மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் உள்ள ரஷ்யர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்
ரஷ்யாவுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி வரும் சிறப்பு அணு பொருள் ஏற்றுமதி இறக்குமதிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கக் கோரிக்கை வைத்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யா ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீதும், 7 கப்பல் நிறுவனங்கள் மற்றும் கடல் தோண்டும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
U.S. imposes sanctions on 27 Gazprombank executives, Russian TV stations
U.S. imposes sanctions on 27 Gazprombank executives, Russian TV stations | ரஷ்யா மீது அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடிகள், டிவி சேனல்கள் முடக்கம்!