ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புட்டினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் ரகசிய காதை அலினா கபேவா சுவட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகின.  

புடினுக்கு ஏற்கனவே 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா மூலம் குறைந்தது இரண்டு மகன்கள் இருப்பதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விளாடிமிர் புடினின் காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உள்ளன. செஞ்சதுக்கத்தில் நடந்த இரண்டாம உலகப் போர் வெற்றி தின அணிவகுப்பில்  கலந்து கொண்ட அவர் இன்று உரையாற்றிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

 உடலை வில்லாக வளைக்கும் திறன் பெற்ற கபேவா ரஷ்யாவின் மிகவும் நெகிழ்வான பெண் என்று அழைக்கப்படுகிறார். அலினா கர்ப்பமாக இருப்பதாக ரஷ்ய செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Alina Kabaeva: இவர் தான் ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியா; அதிர வைக்கும் தகவல்கள்!

கபீவாவுடனான தனது உறவை புடின் ஒருபோதும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுவிட்சர்லாந்தில் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. அவர்களுக்கு 2015 இல் ஒரு மகனும், 2019 இல் மாஸ்கோவில் மற்றொரு மகனும் பிறந்ததாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கபேவாவும் புடினும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவை சேர்ந்த பல முக்கிய நிறுவனங்கள் கபேவா  குடும்பத்திற்கு பணம் மற்றும் சொத்துக்கள் உட்பட பல பரிசுகளை வழங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. புடினால் சிறையில் அடைக்கப்பட்ட, எதிர் கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஏற்படுத்திய ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.